மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம்: தமிழக அரசு அறிவுறுத்தல்
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (13:50 IST)
மீண்டும் உக்ரைன் நாட்டிற்கு செல்ல வேண்டாம் என தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றது என்பதும் குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தொடர்ந்து வீசியதால் நூற்றுக்கணக்கான உயிரிழந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் மீண்டும் போர் தீவிரம் அடைந்துள்ளதால் தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என்றும் அங்கிருந்து திரும்பிய மாணவர்கள் மீண்டும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் தற்போது வந்துள்ள தகவலின்படி உக்ரேனில் இருந்து திரும்பிய மாணவர்கள் யாரும் மீண்டும் உக்ரைன் செல்லவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
இந்த நிலையில் உக்ரேனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு மேற்படிப்பை தொடர மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.