மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர்: மோடி அறிவிக்க இருப்பதாக தகவல்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (21:18 IST)
மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர்: மோடி அறிவிக்க இருப்பதாக தகவல்!
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வரும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரை வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
அக்டோபர் மாத இறுதியில் நடைபெற உள்ள தேவர் குரு பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் மதுரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அதன் பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மதுரை மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அதற்கான ஆணையை பிரதமர் மோடி வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்