உக்ரைன் மீது ரஷ்யா 17 முறை குண்டு வீசித் தாக்குதல்.. .3 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (21:51 IST)
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் போரிட்டு வருகிறது. போர் தொடுத்து ஓராண்டிற்கு மேல் ஆகியுள்ள நிலையில் இதுவரை இரு நாடுகள் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்படவில்லை.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் ஆதரவளித்து, நிதியுதவியும், ஆயுதத் தளவாடங்களும் அளித்து வருகின்றனர்.

இதனால், உக்ரைன், ரஷியாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜி7  உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தன.

இந்த நிலையில்,  கடந்த 2 நாட்களாக உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று அதிகாலையில் தொடர்ந்து 17 முறை குண்டுகள் வீசியது.

இத்தாக்குதலில் 2 குழந்தைகள்  உள்பட 3 பேர் இறந்தனர். இதில், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், கட்டிடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பலவும் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்