ரூ. 16 லட்சம் டிப்ஸ் தூக்கிக்கொடுத்த பிரபல நட்சத்திரம் ! மக்கள் புகழாரம்

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (19:41 IST)
அகில உலகத்தில் உள்ள மக்கள் அனைவருக்குமே தெரிந்த ஒரு கால்பந்து சூப்பர் ஸ்டார் மிஸ்டர் கிரிஸ்ட்டியனோ ரொனால்டோ. இவர் வாங்காத புகழ் இல்லை, பாராட்டுகள் இல்லை, பரிசுகள் இல்லை. உலகில் மிக அதிகம் சம்பளம் வாங்கும் விளையாட்டு நட்சத்திரமாகவும் ஜொலித்துவருகிறார்.
இந்நிலையில் தற்போது ரொனால்டாவை பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு ஹோட்டலில் உள்ள வெயிட்டருக்கு அவர் ரு.16 லட்சம் ரூபாயை டிப்ஸாகக் கொடுத்துள்ளார்.
 
போர்சுக்கல் கால்பந்து அணியின்  கேப்டன் ரொனால்டோ, சமீபத்தில் ரியல்மாட்ரிட் கிளப்பில்  இருந்து விலகி, ஜூவண்ட்ஸ் கிளப்பில் இணைந்தார். அவருக்கு அந்த கிளப்பில் 4 வருடங்கள் விளையாடுவதற்கு ரூ. 800 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தன் காதலியுடன் தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக கிரீஸ்குக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள கோஸ்டா நவரினோ என்ற ஹோட்டலில் அவர்கள் தங்கினர்.
 
அப்போது, அந்த ஹோட்டல் நிர்வாகத்தின் விருந்தோம்பலில் அவர் ரொம்பவே திருப்தி அடைந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் தான் ரூம்பை விட்டு காலி செய்யும் போது, டிப்ஸாக 17 ஆயிரத்து 850 யூரோவை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இதைக் கேள்விப்பட்ட மக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ரொனால்டோவை மிகவும் புகழ்கின்றார்கள்.
 
ரோனால்டோ  கொடுத்த டிப்ஸ் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16 லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்