பிரிட்டன் பொதுத்தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்: ரிஷி சுனக்

Mahendran
வெள்ளி, 5 ஜூலை 2024 (15:28 IST)
பிரிட்டனில் நடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் இந்த தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன் என்று ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது
 
தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளதற்காக  நான் கீர் ஸ்டார்மரை தொடர்பு வாழ்த்தினேன். ஆட்சி அதிகாரம் இன்று முதல் அமைதியான முறையில் கைமாறியுள்ளது. நம் நாட்டின் எதிர்காலம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த புதிஉய ஆட்சி அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
 
இந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். என்னை மன்னிக்கவும் என கூறியுள்ளார். தேர்தல் ரிஷி சுனக் கட்சி தோல்வி அடைந்தாலும் அவர் வடக்கு இங்கிலாந்தில் போட்டியிட்டு  வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிரிட்டனில்  14 ஆண்டுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் இந்த வெற்றியின் மூலம் அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர், பிரிட்டன் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்வியை ஒப்புக் கொள்வதாக பிரதமர் ரிஷி சினக் பேட்டி அளித்த போது அவரை கலாய்க்கும் விதமாக எல் என அச்சிடப்பட்ட காகிதத்தை யூடியூபர் நிகோ ஒமிலானா என்பவர் பிடித்துக் கொண்டு நின்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்