இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவாரா ரிஷி சுனக்?

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (21:42 IST)
இங்கிலாந்தின் புதிய பிரதமராக கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தேர்வு செய்யப்பட்டவர் லிஸ் ட்ரஸ்என்பதும் அவருக்கு போட்டியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இருந்தார் என்பதும் தெரிந்ததே 
 
ரிஷி சுனக்கை வீழ்த்தி இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ் இன்று திடீரென ராஜினாமா செய்து விட்டதை அடுத்து மீண்டும் இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் இன்னும் ஒரு வாரத்தில் தேர்வு செய்யப்படுவார் என ஆளும் கட்சி கூறிய நிலையில் ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் கண்டிப்பாக இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்