கொரோனா பயம்: கதவுகளை அடைத்த கத்தார்!!

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (16:47 IST)
கொரோனா பரவும் அச்சத்தால் கத்தார் 14 நாடுகளின் விமானங்களை தடை செய்துள்ளது. 
 
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் நாட்டில் கொரானா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில், கொரானா பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் தங்கள் நாட்டில் தரையிறங்குவதற்குக் கத்தார் நாடு தடை விதித்துள்ளது. 
 
ஆம், சீனா, இந்தியா, எகிப்து, ஈரான், ஈராக், லெபனான், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, இலங்கை, சிரியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் கத்தாரின் தடைக்குள் அடக்கம்.
 
இதற்கு முன்னர் இத்தாலி நாட்டு விமானங்கள் கத்தாருக்குள் நுழைவதை தடுத்த கத்தார் ஒப்போது 14 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்