குண்டு துளைக்காத கண்ணாடியால் போப்பாண்டவர் காயம்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (06:01 IST)
போப்பாண்டவர் கடந்த சில நாட்களாகவே உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தற்போது அவர் கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கொலம்பியாவில் அவர் திறந்த வாகனத்தில் நின்றுகொண்டே மக்களுக்கு ஆசி வழங்கி கொண்டு சென்று கொண்டிருந்தார்.



 
 
இந்த நிலையில் திடீரென வாகனத்தில் இருந்து தடுமாறிய அவர் குண்டு துளைக்காத கண்ணாடி மீது மோதியதால் அவரது கன்னத்திலும், புருவத்திலும் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் பீ\றிட்டது
 
உடனே அங்கிருந்த போப்பாண்டவரின் மருத்துவர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ரத்தம் கொட்டுவதை நிறுத்தினார்.  இருப்பினும் அவர் அந்த காயத்துடனே மக்களை சந்தித்து ஆசி வழங்கி பின்னர் அங்குள்ள வழிபாட்டுத்தலம் ஒன்றில் வழிபாடு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்