110 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென நொறுங்கி விழுந்த சம்பவம் கஜகஸ்தானில் நடந்து உள்ள நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
110 பேருடன் ரஷ்ய விமானம் ஒன்று பயணம் செய்த நிலையில், அந்த விமானம் திடீரென கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்தாவு என்ற விமான நிலையத்தில் தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்ததாகவும், இதனை அடுத்து மீட்பு படையினர் உடனடியாக சென்று உள்ளே இருந்த பயணிகளை மீட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதன்பின் அவசரமாக தரையிறங்க அனுமதி பெற்று தரையிறங்கிய போது தான் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உயிருக்கு ஆபத்து குறித்த எந்தவித தகவலும் இதுவரை வரவில்லை. இதுவரை 12 பேர் காயமின்றி மீட்கப்பட்டதாகவும், பத்து பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.