பிலிப்பைன்ஸில் போலி மது : சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (16:44 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போலி மது விநியோகிக்கப்பட்டதால் பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் லாகுவானா பகுதியில் பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போலியான மதுவகைகள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்திய 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

போலி மதுவை குடித்து நூறுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பிலிப்பைன்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்