நள்ளிரவில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்: பப்புவா நியூ கினியாவில் மக்கள் பதட்டம்..!

ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (08:06 IST)
பப்புவா நியூ கெனியாவில் அடுத்தடுத்து நள்ளிரவில் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் பதட்டம் அடைந்துள்ளனர். சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 50,000 பேர் உயிரிழந்தனர் என்பதும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துருக்கி சிரியா நிலநடுக்கத்திற்கு பின்னர் இந்தோனேசியா உள்பட ஒரு சில நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று பப்புவா நியூ கினியாவில் அடுத்தடுத்து நான்கு முறை நில நடக்கும் ஏற்பட்டதால் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. 
 
நள்ளிரவில் தொடர்ச்சியாக நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அதிகபட்சமாக 6.5 லிட்டர் அளவில் நில நடக்கும் பதிவானதாகவும் கூறப்படுகிறது. 
 
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் பப்புவா நியூ கினியா மக்கள் அச்சத்துடன் தெருக்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்