துருக்கியில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம்.. மீண்டும் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (07:51 IST)
துருக்கியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 47 ஆயிரம் பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில் நேற்று திடீரென நள்ளிரவில் மீண்டும் அடுத்த அடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் இந்த புதிய நிலநடுக்கத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் நேற்று இரவு 6.4 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
ஏற்கனவே பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளின் மீட்பு பணியை நடந்து வரும் நிலையில் தற்போது புதிய நில நடக்கும் ஏற்பட்டுள்ளது அந் நாட்டு மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது. 
 
இந்த நிலையில் மீட்டு பணிகள் ஓரளவு முடிந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ம் ஏற்பட்டு மீண்டும் கட்டிடங்கள் சரிந்து விழுந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்