ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்.. பொதுமக்கள் அச்சம்..!

வியாழன், 23 பிப்ரவரி 2023 (08:09 IST)
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னால் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 50,000 பேர் உயிரிழந்தனர் என்பதும் 75 ஆயிரம் பேர்களுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மீட்பு படை உள்பட உலகெங்கிலும் உள்ள மீட்பு படையினர் துருக்கி மற்றும் சிரியாவில் மீட்டு நடவடிக்கை எடுத்தனர். மேலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரமாட்டம் ஆகியதை அடுத்து மீட்பு பணிகள் இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீட்பு படையினர் 10 நாட்களுக்குப் பின்னரும் கூட ஒரு சில குழந்தைகள் உட்பட சிலரை உயிருடன் மீட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து கடந்த இரண்டு நாட்கள் முன்னர் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் அருகே அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்