பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பரப்பளவில் பலுசிஸ்தான் 44 சதவீதத்தை கொண்டுள்ளது. பலுசிஸ்தான் தனிநாடு அந்தஸ்தை கோரும் நிலையில், பாகிஸ்தான் இவர்களை ராணுவ கட்டுபாட்டில் வைத்துள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை துறைமுகத்துடன் இணைக்க பிரமாண்ட நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இது சீன, பாகிஸ்தான் நெடுஞ்சாலை பொருளாதார மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பலுசிஸ்தான் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதே போல் இந்த நெடுஞ்சாலை காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதி வழியாக செல்வதால் இந்தியாவும் இந்த திட்டத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்த எதிர்ப்புகள் அனைத்திற்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் தரப்பு குறிப்பிடதாவது, சீன, பாகிஸ்தான் நெடுஞ்சாலை பொருளாதார மண்டல திட்டத்தை சீர்குலைக்க இந்தியா சதி செய்து வருகிறது. இதற்கு ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியா பயன்படுத்துகிறது.
பலூ கிளர்ச்சிக் குழுக்களுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.