பாகிஸ்தான் தூதருக்கு அனைவரும் செருப்பை அனுப்புங்கள்: பாஜக பிரபலம் கோரிக்கை

சனி, 30 டிசம்பர் 2017 (01:26 IST)
சமீபத்தில் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்புஷன் ஜாதவ்வை பார்க்க சென்ற அவரது மனைவி மற்றும் தாயாரை பாகிஸ்தான் அதிகாரிகள் அவமதித்த சம்பவத்தை இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது கண்டனத்தை பதிவு செய்தார்

இந்த நிலையில் பாகிஸ்தான் அதிகாரிகளின் இந்த அவமதிப்பு செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு டெல்லி பா.ஜ.க செய்தி தொடர்பாளர் தஜிந்தர் பாக்கா என்பவர் அமேசான் இணணயதளத்தில் செருப்புகளை ஆர்டர் செய்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முகவரியை பதிவு செய்து அந்த முகவரிக்கு செருப்பை டெலிவரி செய்யுமாறு அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். இதுகுறித்த ரசீதையும் அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு இந்தியர்கள் அனைவரும் செருப்பு ஆர்டர் செய்யுங்கள் என்று அவர் தனது டுவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்