தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிப்பு - பாகிஸ்தானில் அதிரடி!

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (13:18 IST)
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது. 
 
மேலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது எனவும் உணவகங்கள், வணிக வளாகங்களில் நுழையத் தடை விதிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களை நோக்கி விரைவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கிறது. பாகிஸ்தானில் கொரோனா தொற்று அதிகரித்து  இதுவரை 10 லட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் பாதிக்கப்பட்டு 23 ஆயிரத்து 702 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்