50 பேரை சுட்டுக் கொன்ற உமருக்கு ஐ லவ் யூ சொன்ன மனைவி : பகீர் தகவல்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (15:33 IST)
அமெரிக்காவின் ஆர்லாண்டோ கிளப்பில் 50 பேரை சுட்டுக்கொன்றவுடன் உமரின் செல்போனுக்கு, அவரது மனைவி ஐ லவ் யூ என எஸ்.எம்.எஸ் அனுப்பிய விவகாரம் தற்போது வெளியே தெரிந்துள்ளது. 


 

 
சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர் இரவு விடுதியில் நுழைந்த உமர் மாட்டின் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் பலியாகினர். மேலும் 50 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஒரு பக்கம் உமரை பற்றி பல விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 
 
உமர் அந்த தாக்குதலை நடத்தப்போவது அவருக்கு மனைவிக்கு தெரிந்தும் அவர் போலீசாருக்கு தகவல் கொடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதாவது, உமர் அந்த கிளப்புக்கு சென்று 50 பேரை சுட்டுக் கொன்றதை, தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு அவரது மனைவி உமருக்கு போன் செய்துள்ளார்.
 
ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, தனது மனைவிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். அதில்  “டிவி பார்த்துவிட்டு எனக்கு போன் செய்கிறாயா?” என்று கேட்டுள்ளர். அதற்கு பதில் அனுப்பியுள்ள அவரின் மனைவி “ ஐ லவ் யூ” என்று கூறியுள்ளார்.
 
எனவே, உமரின் மனைவிக்கு தெரிந்தே எல்லாம் நடந்திருக்கிறது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே அவர் தற்போது போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்