ஜம்மு அருகே உள்ள ரூப் நகரில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலில் இடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு அருகே ரூப் நகரில் புகழ் பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை, தோடா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 14 ஆம் தேதி சேதப்படுத்தினார். இதனால், இதனைக் கண்டித்து, அங்கு போராட்டமும், வன்முறையும் வெடித்தது.
இந்த நிலையில், நானக் நகரில் உல்ள ஒரு கோவில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த இந்து மக்களும், பாஜகவினரும் கடும் அதிர்ச்சி அடைந்து, போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்த போராட்டத்தை ஒடுக்கும் விதமாக ஜம்மூவில் இணையதள சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.