தமிழ் எம்.பிக்கள் போர்கொடி: ராஜபக்க்ஷேவுக்கு எதிர்ப்பு

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (16:35 IST)
சில நாட்களுக்கு இலங்கை அரசியலில்பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதனை  தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேவிற்கு கொடுத்து வந்த ஆதரவை அதிபர் சிறிசேனா வாபஸ் பெற்றார். அதனால் முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே புதிய பிரதமராக ராஜபக்‌ஷேவால் அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து கருஜெயசூர்யா ரணில் விக்ரமசிங்கை பிரதமராக அங்கீகரித்தார். இருப்பினும் இலங்கை நாடாளுமன்றம் அதிபர் சிறிசேனாவால் முடக்கப்பட்டதால் விக்ரமசிங்கே தன் பெரும் பெரும்பான்மையை  நிரூபிக்க முடியாமல் போனது.
 
இந்நிலையில் ராஜபக்‌ஷே பிரதமராக பொறுப்பேற்று தன் பணியில் ஈடுபட தொடங்கினார்.
இதனையடுத்து இலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது  ராஜபக்சேவுக்கு ஆதரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
வருகிற ஏழாம் தேதி இலங்கையின் பிரதமர்  யார் என்பதற்கான ஓட்டெடுப்பு நடக்கவுள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதில் முக்கியமாக பாராளுமன்றத்தில் நம்பிக்கை  வாக்கெடுப்பு நடத்தப்படும் போது ராஜபக்‌ஷேவுக்கு எதிராகவே வாக்களிக்க இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்