லவ் டார்ச்சர்: 9-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்

சனி, 3 நவம்பர் 2018 (15:49 IST)
கர்நாடக மாநிலத்தில் காதலிக்க மறுத்த 9 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியரே கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டையில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த சங்கர் என்ற ஆசிரியர் அந்த மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளான். இதனை மாணவி மறுத்த போதிலும் சங்கர் விடாமல் மாணவியை டார்ச்சர் செய்து வந்துள்ளான்.
 
இந்நிலையில் இன்று அந்த மாணவியின் வீட்டிற்கு செம போதையில் சென்ற சங்கர் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளான். இதனை மாணவி மறுக்கவே தான் எடுத்து வந்த பிளேடால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளான். மாணவி வலியால் அலறவே அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதனையடுத்து ஆசிரியர் சங்கரை பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள் அவனை போலீஸில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்