இம்ரான் கான் பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சிகள் பேரணி !

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (11:51 IST)
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடு தழுவியப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் அரசு வெற்றி அடைந்து ஒரு வருடம் முடிவடைந்திருக்கும் நிலையில் அவர் பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தியுள்ளனர். இம்ரான் கான் பதவியேற்ற பின் சீரழிந்த நிலையிலுள்ள பொருளாதாரத்தை மீட்பதில் தோல்வி அடைந்துவிட்டதாக  குற்றம் சாட்டி உள்ளனர். இம்ரான் கான் தேர்தலில் வெற்றி அடைந்த தினத்தை கருப்பு தினமாகவும் அவர்கள் அனுசரித்தனர்.

மேலும் தேர்தலில் வெல்ல பாகிஸ்தான் ராணுவம் இம்ரான் கானுக்கு உதவி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழ அதைப் பாகிஸ்தான் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்