இடிந்து போன தினகரன்: சசிகலா வெளிவருதில் பெரும் சிக்கல்??

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (11:42 IST)
சசிகலாவை வெளியில் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என டிடிவி தினகரன் கூறிய நிலையில் இதற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் ஆகிறது. இப்படியிருக்க சமீபத்தில்தான் டிடிவி தினகரன் சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அவர் நிச்சயம் விரைவில் வெளியே வருவார் என தெரிவித்திருந்தார். 
ஆனால், தற்போது உள்ள சூநிலையில் சசிகலா சிறையில் இருந்த தண்டனை காலத்திற்கு முன் வெளியே வருவதற்கான எந்த ஒரு சாத்திய கூறுகளும் இல்லை என்றே தெரிகிறது. இதனால் தினகரன் மேற்கொள்ளும் முயற்சிகள் எதுவும் எடுபடாது எனவும் தெரிகிறது. 
 
ஆம், கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து ஆட்சியும் கவிழ்ந்தது. இதனால், தங்களது பெரும்பான்மை இருப்பதாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா. 
எடியூரப்பாவின் கோரிக்கையை ஏற்று ஆளுநரும் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்துள்ளது. அதன் படி இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்கிறார் என தகால் வெளியானது. அதோடு 31 ஆம் தேதிக்குள் பாஜக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால் எப்படியும் பாஜக கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. 
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதினால், சசிகலா வெளியே வர என்ன சட்ட நடவடிக்கைகளை தினகரன் எடுத்தாலும் அது செல்லாது. ஏற்கனவே சசிகலா சிறைக்கு செல்வதற்கு பாஜகவே முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில் இப்போது அவர்களது ஆட்சியில் சசிகலா முன் கூட்டியே வெளியே வருவது சந்தேகம்தான். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்