ஒரே வீட்டில் 9 மனைவிகளுடன் வாழ்ந்த இளைஞருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்
புதன், 6 ஏப்ரல் 2022 (19:12 IST)
ஒரே வீட்டில் 9 மனைவிகளுடன் வாழ்ந்த இளைஞருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்
அமெரிக்கா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது 9 மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவரது வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
9 மனைவிகளின் ஒருவர் விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்து உள்ளார். தனது கணவரை மற்ற பெண்கள் பங்கு போட்டுக் கொள்வதை நான் விரும்பவில்லை என்றும் ஒரே ஒரு கணவருக்கு ஒரே ஒரு மனைவியாக வாழ விரும்புகிறேன் என்றும் கூறி அவர் விவாகரத்து செய்துள்ளார்
இந்த நிலையில் தன்னுடைய 9 மனைவிகளில் ஒருவர் விவாகரத்து செய்து விட்டதால் அவருக்கு பதிலாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய அவர் முடிவு செய்திருப்பதாகவும் விரைவில் தனது திருமணத்தை அவர் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது