கள்ளக் காதலை கண்டித்ததால் மனைவி கொலை – கணவர் வாக்குமூலம் !

புதன், 30 மார்ச் 2022 (19:24 IST)
கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் தனது காதல் மனைவியை கொலை செய்தேன் என கணவன் வாக்கு மூலம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வடுகன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

இவரது மனைவி சுப்ரஜா. கடந்த  நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

 இந்த தம்பதியர்க்கு 1 ஆண் குழந்தை உள்ளது. இ ந் நிலையில், கணேஷுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்ப்பு இருந்ததாகத் தெரிகிறது. இதை மனைவி சுப்ரஜா தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்ரஜா காணவில்லை. இதுகுறித்து போலீஸர் விசாரித்து வந்தனர். இதில் ,கணேஷ் சுப்ரஜாவை அருகில் உள்ள தோப்பில் உயிருடன் புதைத்துள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார்.  இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்