கணவர் பிரிந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்

திங்கள், 28 மார்ச் 2022 (23:14 IST)
கணவர் பிரிந்து சென்ற நிலையில் தனது செல்வி என்பவர் மூன்று மகள்களுடன் தனியாக வசித்து வரும் நிலையில் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுவதாக கூறி இன்று காலை மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அவர்களிடம் மனு அளித்தார் ஒரு மணி நேரத்தில் தையல் மிஷின் அவர்களுக்கு வழங்கி உதவிக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.
 
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட தமிழ் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் செல்வி இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றதால் மூன்று குழந்தைகளை சிரமப்பட்டு வளர்த்து வரும் நிலையில் அவரின் மூன்றாவது குழந்தை ரோகினி மாற்றுத்திறனாளியான இப்பெண்ணுக்கு ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நகர் பகுதியில் அடுக்குமாடி தமிழ்நாடு அடுக்குமாடி வீட்டுவசதி  குடியிருப்பில் ஒரு வீட்டு வழங்கியுள்ளார். இந்நிலையில் இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்ற நிலையில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாக எங்கள் வாழ்வாதாரத்தை மீட்க தையல் மிஷின் வழங்கவேண்டுமென மனு அளித்தார்., அதனை கனிவுடன் கேட்ட மாவட்ட ஆட்சியர் ஒரு மணி நேரத்தில் அப்பெண்ணிற்கு புதிய தையல் மிஷின் வழங்கி உதவிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் செயல் மனு பலரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மேலும் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்