வில்ஸ்மித் இடத்தில் என் கணவர் இருந்திருந்தால்: குஷ்பு பேட்டி

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (08:59 IST)
வில்ஸ்மித் இடத்தில் என் கணவர் இறந்து இருந்தால் கண்டிப்பாக தொகுப்பாளரை அடித்திருப்பார் என குஷ்பு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது மனைவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தொகுப்பாளரை நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் பளாரென்று அறைந்தார் 
 
இது குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை குஷ்பு கூறும்போது எந்த வன்முறையையும் நான் ஆதரிக்கவில்லை ஆனால் அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் நகைச்சுவை என்ற பெயரில் ஒரு பிறவி குறைபாடுகளை பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளனர்
 
இது போன்ற இடத்தில் எனது கணவர் இருந்தாலும் வில் ஸ்மித் செய்ததைதான் செய்திருப்பார் என்று கூறியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்