கருச்சிதைவு ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (12:02 IST)
கருச்சிதைவு ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை!
கருச்சிதைவு ஏற்பட்டால் அந்த பெண்ணுக்கும் அவருடைய கணவருக்கும் மூன்று நாட்கள் விடுமுறை என நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளது 
 
கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்றும் குழந்தை இறந்து பிறந்தால் அல்லது கருச்சிதைவு ஏற்பட்டால் பெண் மற்றும் அவரது கணவருக்கு மூன்று நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் சட்டம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்திரா என்பவர் இந்த மசோதாவுக்கு அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து மார்ச் 24 ஆம் தேதி முதல் கருச்சிதைவு ஏற்படும் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் மூன்று நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை என்ற சட்டம் நியூசிலாந்தில் அமலுக்கு வருகிறது 
 
இந்தியா உள்பட ஏற்கனவே ஒரு சில நாடுகளில் இந்த சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நியூசிலாந்து நாட்டிலும் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து அந்நாட்டில் உள்ள பெண்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்