உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எங்கு நடக்கும்?
செவ்வாய், 9 மார்ச் 2021 (08:21 IST)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் மாதம் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரின் புகழ்ப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது அந்த போட்டி அங்கு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளதாவது, இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெற இருக்கிறது. லண்டனில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் அங்கு போட்டி நடைபெறவில்லை.