57 நாடுகளில் ஒமிக்ரான் பி.ஏ.2 : உலக சுகாதார மையம் தகவல்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (08:20 IST)
ஒமிக்ரான் வைரஸ் புதிதாக உருமாறி ஒமிக்ரான் பிஏ2 என புதிய வகையில் உருமாரி பரவி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையிலும் ஒமிக்ரான் பிஏ2  என்ற வகை வைரஸ் மிக அதிகமாக உலகம் முழுவதும் பரவி வருவதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
வேகமாக பரவும் தன்மை கொண்ட  ஒமிக்ரான் பி.ஏ.1  வகையிலிருந்து உருமாற்றமடைந்து  ஒமிக்ரான் பி.ஏ.2 வகை அதிகம் பரவி வருகிறது என சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது 
 
இந்த உருமாறிய  ஒமிக்ரான் பி.ஏ.2 வைரஸ் இதுவரை 57 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அனைத்து நாடுகளிலும் உள்ள பொதுமக்கள் தடுப்பூசி செய்து கொண்டால் இந்த வைரஸில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்