ஏழைகள் பயன்படுத்தும் குடைகளுக்கு வரி அதிகரிப்பா? பாஜகவினர் விளக்கம்!

புதன், 2 பிப்ரவரி 2022 (19:01 IST)
பணக்காரர்கள் பயன்படுத்தும் வைரம் போன்ற பொருட்களுக்கு வரியை குறைத்து விட்டு ஏழைகள் பயன்படுத்தும் குடைகளுக்கு வரி அதிகம் விதிப்பதா என நேற்று பட்ஜெட்டை விமர்சனம் செய்து பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இதற்கு பாஜகவினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட குடைகளுக்கு எந்தவிதமான அதிகப்படியான வரியும் கிடையாது என்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குடைகளுக்கு மட்டுமே 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்
 
இதன் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போலியான தரம் குறைந்த குடைகள் விற்பனை குறைந்துவிடும் என்றும் அதனால் உள்நாட்டு குடை உற்பத்தியாளர்களுக்கு பயன் கிடைக்கும் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்