கொரோனா வைரஸ்: ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் இத்தாலி நிலவரம்!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (08:59 IST)
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக தற்போது அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பால உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 34,000 ஐ தாண்டியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் சாமான்யர்கள் மட்டுமில்லாது சினிமா பிரபலங்கள், அரச குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் முதலில் இந்த வைரஸ் தொற்று பரவினாலும் இப்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக சேதத்தை விளைவித்து வருகிறது. இந்த மூன்று நாடுகளின் தற்போதையை கொரோனா வைரஸ் பாதிப்பு நிலையை பார்ப்போம்.

அமெரிக்கா :- நேற்று ஒரு நாளில் மட்டும் 19,988 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 1,63,479 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 3000 ஐ நெருங்கியுள்ளது.

ஸ்பெயின்:- மொத்தம் 87956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 913 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 7,716 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலி :- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000 த்தை தாண்டி உள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் 812 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11,591 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்