1.5 கோடியை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு: பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (06:30 IST)
கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 கோடியை நெருங்கியுள்ளதால் உலக நாடுகளிடையே பெரும் அச்சம் ஏற்பட்டு இருந்தாலும் அதில் மூன்றில் ஒரு பகுதியினர் குணமாகியுள்ளதால் மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 
சற்றுமுன் வெளியான தகவலின்படி உலகம் முழுக்க 1,46,33,037 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுக்க கொரோனாவிலிருந்து 87,30,163 லட்சம் பேர் மீண்டனர் என்றும், உலகம் முழுக்க கொரோனாவிற்கு 6,08,539 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என்றும் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 52,94,335  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
உலக நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,584 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து மொத்தம் 38,96,855 லட்சம் பேர் அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் மொத்தம் 20,99,896 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பிரேசிலில் அதிகபட்சமாக கொரோனாவால் ஒரே நாளில்  716 பேர் பலியாகியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,243 பேருக்கு கொரோனா பாதிப்பு என்பதும், இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,18,107 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்