ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை! – மியான்மர் ராணுவம் அட்டூழியம்!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (11:11 IST)
மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் ஜனநாயக ரீதியாக ஆங் சான் சூகி கட்சி ஆட்சியமைத்த நிலையில் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவத்தின் சர்வதிகார போக்கை கண்டித்து கடந்த மாதம் முதலாக மியான்மரில் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அங்கங்கே துப்பாக்கி சூடு சம்பவத்தால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஒருநாளில் மட்டும் மியான்மர் ராணுவம் குழந்தைகள், பெண்கள் உட்பட 114 பேரை சுட்டுக்கொன்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவத்தின் ஈவு இரக்கமற்ற இந்த செயலுக்கு ஐ.நா மற்றும் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்