தொண்டைக்குள் செல்போனை போட்டு இறுக்கி கொன்ற கொடூர மகன்...

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (20:02 IST)
இலங்கையில் உள்ள ஊவா பரணகம என்ற மாகாணத்தில் தாயின் தொண்டைக்குள் செல்போனை போட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடுர மகன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த் அசம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
61 வயதான தனது தாயை கொலை செய்துவிட்டு, நானும் என் மனைவியும் வெளியே சென்றுவிட்டு வந்தோம் வந்து பார்த்த போது எனது தாய் மர்மமான முறையில் இறந்துகிடந்ததாக போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் தாயின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது, கழுத்து நெறிக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பதாவவும், முச்சடைத்துதான் அவர் மரணமடைந்துள்ளார் எனவும் தெரியவந்தது. 
 
இதன் பின்னர் நடத்திய தீவிர விசாரணையில், தாயின் தொண்டைக்குள் செல்போனை போட்டு, கழுத்தை இறுக்கி கொன்றதாக அவரது மகன் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்