15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: கால்வாயில் பிணமாக மீட்பு!

செவ்வாய், 16 ஜனவரி 2018 (15:05 IST)
ஹரியானா மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் பலரால் கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 
கடந்த 9-ஆம் தேதி 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். சிறுமியின் குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இறுதியில் அந்த சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்னர் அங்குள்ள கால்வாய் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
 
கால்வாயிலிருந்து உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட அந்த சிறுமியை ஒன்றுக்கு மேற்பட்டோர் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பத்தில் ஈடுபட்டது யார் என்பதை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
அதே நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 9-ஆம் தேதி முதல் காணவில்லை எனவும், அவர் மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்