அமெரிக்க அதிபர் மீது பாலியல் குற்றச்சாட்டு: மாடல் அழகி பகீர் புகார்

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (07:33 IST)
அமெரிக்க அதிபர் மீது பாலியல் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் தற்போது பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் அவர் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் . ந்த நிலையில் திடீரென மாடல் அழகி ஒருவர் அமெரிக்க அதிபர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
முன்னாள் மாடல் அழகியான ஏமி டோரீஸ் என்பவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது திடீரென பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரங்கில் நான் டிரம்பால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அந்த புகாரில் மாடல் அழகி ஏமி டோரீஸ் கூறியுள்ளார். ஆனால் இந்த புகாரை டிரம்ப் வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர் 
 
மாடல் அழகி ஏமி டோரீஸ் புகார் மனுவில் ட்ரம்புக்கு அப்போது வயது 51 என்றும் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்றும் அவரது வழக்கறிஞர்கள் கூறினர். ஏமி டோரீஸ் தனது காதலருடன் டிரம்பை சந்திக்க வருவதாகவும் தெரிவித்துள்ளனர் 
 
மாடல் அழகி ஏமி டோரீஸ் பாலியல் புகார் தற்போது அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த புகாரால் ட்ரம்புக்கு வரும் தேர்தலில் பின்னடைவாக இருக்கும் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்