இந்தியாவில் ஒரே நாளில் 96 ஆயிரம் பேர் பாதிப்பு, 1,175 பேர் மரணம்: கொரோனா குறித்த அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (06:57 IST)
இந்தியாவில் ஒரே நாளில் 96,792 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,12,686 எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 
அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரேநாளில் 87,778 பேர் குணமடைந்தனர் என்றும், இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,09,828 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 1,175 பேர் கொரோனாவால் மரணம் என்றும், இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 84,404 என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒருநாள் பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்பதும் அம்மாநிலத்தில் மட்டும் 24,617 பேர் பாதித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று ஒரே நாளில் கர்நாடகாவில் 9,366 பேர்களும், ஆந்திராவில் 8,702 பேர்களும், உத்தரப்பிரதேசத்தில் 6,029 பேர்களும், தமிழகத்தில் 5560 பேர்களும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
 
அதேபோல் இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்களில் மகாராஷ்டிராவில் 468 மரணம் அடைந்துள்ளனர். கர்நாடகாவில் 93 பேர்களும், உத்தரப்பிரதேசத்தில் 81 பேர்களும், ஆந்திராவில் 72 பேர்களும், தமிழகத்தில் கொரோனாவுக்கு 59 பேர்களும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்,

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்