பாலியல் புகாரளித்த பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு..! – மூடி மறைக்கும் இளவரசர்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (08:32 IST)
இங்கிலாந்து இளவரசர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ. கடந்த 2001ம் ஆண்டு ஆண்ட்ரூ 17 வயதான வர்ஜீனியா க்யூப்ரே என்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் ஆண்ட்ரூ விசாரணையை சந்தித்துதான் ஆக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத் அரியணை ஏறியதன் 70வது ஆண்டை அரச குடும்பம் கொண்டாடி வரும் நிலையில் இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்த வழக்கில் சமரசம் செய்ய வர்ஜீனியா க்யூப்ரேவுக்கு இந்திய மதிப்பில் ரூ.120 கோடி தருவதாக ஆண்ட்ரூ சமரசத்தில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இந்த வழக்கு திரும்ப பெறப்பட வாய்ப்புள்ளதாகவும் பேசிக்கொள்ளப்படுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்