பேஜர் வெடிப்பிற்கு இஸ்ரேல் தான் காரணம்.. சரியான தண்டனை அளிக்கப்படும்: லெபனான் !

Mahendran
புதன், 18 செப்டம்பர் 2024 (11:32 IST)
இஸ்ரேல் தான் பேஜர்களை வெடிக்க வைத்தது என்று லெபனானின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜியாத் மக்காரி குற்றம்சாட்டியுள்ளது, இந்த தாக்குதலுக்கு சரியான தண்டனை அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

லெபனானில் இன்று பேஜர் சாதனங்கள் திடீரென வெடித்து, ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என 9 பேர் உயிரிழந்தனர். 2,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் உச்ச கட்டத்தில் நடைபெற்றுள்ளது. காஸா போரின் காரணமாக இந்த மோதல் தீவிரமடைந்த நிலையில், இது இஸ்ரேலின் உயர் தொழில்நுட்ப தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த தாக்குதலை "இஸ்ரேலின் வெறியாட்டம்" என லெபனானின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜியாத் மக்காரி கண்டித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலுக்காக இஸ்ரேலுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த பேஜர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமெரிக்க உள்துறை செய்தித் தொடர்பாளர் மேத்தீவ் மில்லர், அமெரிக்கா இதில் சம்பந்தப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்