வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக உருவாகி இருப்பதாகவும், இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதனால், தமிழகத்தில் இன்று மாலை முதல் மழை அதிகரிக்கும் என்றும், குறிப்பாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று, அதாவது நவம்பர் 27ஆம் தேதி முதல் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், நாளை மற்றும் நாளை மறுநாள் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.