முன்னாள் அமைச்சர் கருணா கைது: இலங்கை அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (12:15 IST)
நிதி மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா அம்மானை போலீஸார் கைது செய்தனர்.



விடுதலை புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த கருணா, பிரபாகரனிடம் ஏற்பட்ட மனக்கசப்பால் அங்கிருந்து விலகி இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார். அதுமட்டுமின்றி ராஜபக்சே அரசில் அமைச்சராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் சிறிசேன ஆட்சி பொறுப்பேற்றதும் ராஜபக்சே ஆட்சியில் செய்த மோசடிகள் பலவும் வெளியே வர ஆரம்பித்தன. இது தொடபாக அவரது குடும்பத்தினர் பலரும் கைது செய்யப்பட்டும், விசாரணை வளையத்திலும் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் நிதி மோசடி செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் கருணா மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அரசு வாகனத்தை இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று கருணாவை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
 
அடுத்த கட்டுரையில்