அளவுக்கு மீறிய ஜிம் ட்ரெய்னிங்! காதில் ரத்தம் வழிந்து இறந்த ஜிம் உரிமையாளர்!

Prasanth Karthick

செவ்வாய், 19 நவம்பர் 2024 (13:02 IST)

சேலத்தில் அதிக உடற்பயிற்சி செய்ததால் ஜிம் பயிற்சியாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமாக உள்ளது. ஆனால் உடற்பயிற்சியை அதிகமாக செய்தால் அது ஆபத்தாகவும் மாறிவிடும் என்பதற்கு சான்றாக பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.

 

சேலம் மாவட்டம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான மகாதீர் முகமது. ஜிம் பயிற்சியாளரான இவர் அப்பகுதியில் ஒரு ஜிம் வைத்து நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு ஜிம்மில் உடற்பயிற்சி முடித்துவிட்டு குளித்துக் கொண்டிருந்துள்ளார் மகாதீர். நீண்ட நேரமாகியும் மகாதீர் வெளியே வராததால் கதவை தட்டி பார்த்துள்ளார்கள்.

 

ஆனால் எந்த பதிலும் இல்லாததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மகாதீர் காதில் ரத்தம் வழிந்த நிலையில் பரிதாபமாக கிடந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வந்த மகாதீர் ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கும் மேல் உடற்பயிற்சி செய்து வந்ததாக மகாதீரின் தாய் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்