அமெரிக்காவில் 2020-ல் வரவிருக்கும் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் கமலா ஹாரிஸ் வாக்கு இயந்திரம் வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்திய வம்வாசளியைச் சேர்ந்த அமெரிக்க வழக்கறிஞர் கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியா மாகாணத்தின் அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர்.
தற்போது 2020-ல் வரவிருக்கும் அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடுவதற்காக நாமினேஷன் தாக்கல் செய்துள்ளார். இவர் வரவிருக்கும் அமெரிக்க தேர்தலில் “வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுகளை உபயோகிக்கவேண்டும்” என்று வலியுறுத்தி வருகிறார்.
மேலும் அவர், வாக்கு இயந்திரத்திரங்களை நீக்கிவிட்டு வாக்குச் சீட்டுகளை உபயோகித்தால் வெளிநாட்டிலிருந்து எதிரிகளால் ஹேக் செய்ய முடியாது எனவும், தேர்தலும் பாதுகாப்பாக நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தேர்தலில் வாக்கு இயந்திரம் சம்பந்தப்பட்ட புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் கமலா ஹாரிஸின் கோரிக்கை சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.