அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இதில் கமலா ஹாரிஸ் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் இருவரும் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே காரசாரமாக விவாதம் நடத்திய நிலையில் விவாதத்திற்கு பின்னர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு மணி நேரம் நீடித்த இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் சிரித்த முகத்துடன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் பொருளாதாரம், கருக்கலைப்பு, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா போர் ஆகியவை குறித்து காரசாரமாக விவாதித்தனர்.
]இந்த நிலையில் நேரடி விவாதத்தின் வெற்றியாளர் யார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார் என்றும் அவர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே அமெரிக்காவின் அடுத்த அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.