4 ஆண்டு பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்த ஜோ பைடன்: அமெரிக்கர்கள் அதிருப்தி

Mahendran

திங்கள், 9 செப்டம்பர் 2024 (16:01 IST)
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நான்கு ஆண்டுகள் பதவியில் இருக்கும் நிலையில் அவர் அதில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளதாகவும் இது பதவி காலத்தில் சுமார் 40% என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த 2020 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில் அவர் தனது நான்காண்டு பதவி காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்து உள்ளார் என்று குடியரசு கட்சியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
532 நாட்கள் என்பது அமெரிக்க அதிபரின் பதவிக்காலத்தில் 40% என்றும் சராசரியாக ஒரு அமெரிக்க அரசு ஊழியர் 48 வருடத்தில் எடுக்கக்கூடிய விடுமுறையை அதிபர் ஜோ பைடன் நான்கு ஆண்டுகளில் எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் வருடத்திற்கு 10 முதல் 14 நாட்கள் மட்டுமே ஊதியத்துடன் விடுமுறை எடுக்க முடியும் என்றும் ஆனால் ஜோ பைடன் மிக அதிகமாக விடுமுறை எடுத்து உள்ளார் என்றும் அமெரிக்கர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் ஜோ பைடன்  தரப்பிலிருந்து இதற்கு பதில் அளித்த போது விடுமுறையில் இருந்தாலும் அவர் தனது பணியை செய்து கொண்டிருந்தார் என்று கூறியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்