திடீரென மருத்துவமனைக்கு சென்ற ஜோ பிடன் – ட்ரம்ப் ரியாக்‌ஷன்!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (09:17 IST)
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடன் தனது நாயுடன் விளையாடிக் கொண்டு இருக்கும் போது காலில் அடிபட்டு சுளுக்கு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். ஆனால் தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் ட்ரம்ப் பிடிவாதம் பிடித்து வந்தார். ஆனால் பிடனின் வெற்றி உண்மையானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதையடுத்து ஜனவரி மாதம் பிடன் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் பிடன் தனது செல்ல நாயுடன் விளையாடிக் கொண்டு இருக்கும் போது காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் பிடன் சீக்கிரமே குணமாக ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்து டிவீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்