ஓடி ஒளியும் ஆளில்லை... வெளியே வந்த ஜாக் மா!!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (11:45 IST)
அலிபாபா நிறுவனர் ஜாக் மா கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றியுள்ளார். 

 
அலிபாபாவின் இணை நிறுவனரும், சீன நாட்டை சேர்ந்த தொழிலதிபருமான ஜாக் மா கடந்த அக்டோபர் முதல் தலைமறைவாகி இருந்தார். சீன அரசு கொடுத்த நெருக்கடி தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.
 
இந்நிலையில், அலிபாபா நிறுவனர் ஜாக் மா கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றியுள்ளார். ஆம், கொரோனா காலம் முடிந்த பிறகு மீண்டும் சந்திப்போம் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். கடைசியாக அவர் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி சீன வங்கியாளர்கள் கலந்துகொண்ட பொதுச்சபையில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்