இந்தியாவில் பூடானுக்கு 1.5 லட்சம் கரோனா தடுப்பூசி ஏற்றுமதி!

புதன், 20 ஜனவரி 2021 (10:19 IST)
இந்தியாவில் இருந்து இன்று பூடானுக்கு 1.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பபட உள்ளன.

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது. நாடு முழுவதும் பல மையங்கள் அமைக்கப்பட்டு முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானுக்கு இன்று மும்பையில் இருந்து 1.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்