ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிறைப்பிடிப்பவர்களை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டுக் கொலை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக், சிரியா நாட்டில் சில பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள், சிறைப்பிடிப்பவர்களை சுட்டுக் கொள்வதும் சித்திரவதை செய்வதும் வழக்கம்.
அதுபோல தற்போது கொதிக்கும் தாரில் கைதிகளை தூக்கிப் போட்டுக் கொலை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல் ஷோர்டா என்ற இடத்தில் ஐ.எஸ் அமைப்பினர் இதுபோன்று 6 பேரை கொலை செய்துள்ளனர்.
ஈராக் அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகப்படும் நபர்களை கொதிக்கும் தாரில் போட்டு சித்திரவதை செய்து கொலை செய்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிட்டில் தூக்கிப் போட்டு 25 பேரை கொலை செய்தனர்.