இந்தியாவில் தடை செய்யப்படுகிறதா டெலிகிராம் செயலி? - பாவெல் துரவ் கைது எதிரொலி!

Prasanth Karthick
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (08:40 IST)

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலியின் சிஇஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

உலகம் முழுவதும் பல நாடுகளிலும் ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று டெலிகிராம். இதன் நிறுவனர் ரஷ்யாவை சேர்ந்த பாவெல் துரோவ். டெலிகிராமில் எவ்வளவு பெரிய கோப்புகளையும், பல வித ஃபைல்களையும் அனுப்ப முடியும் என்பதால் அதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.

 

அதேசமயம் டெலிகிராம் மூலமாக போதைப்பொருள் விற்பனை மற்றும் பல தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விஷயங்களும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதனால் மக்கள் அடிப்படை பாதுகாப்பின் பொருட்டு பிரான்ஸ் அரசு சில தகவல்களை டெலிகிராமிடம் கேட்டும் அதை டெலிகிராம் பகிர மறுத்துவிட்டது.

 

இந்நிலையில் பாவெல் துரோவ் சட்டத்தை மீறியதாக பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் டெலிகிராம் பயன்பாட்டில் உள்ள ஆபத்து குறித்த ஆராய பல நாடுகளை தூண்டியிருக்கிறது. அவ்வாறாக இந்தியாவிலும் டெலிகிராம் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. அது தேச பாதுகாப்புக்கும், சட்ட பாதுகாப்பிற்கும் எதிரான உள்ளடக்கங்களை கொண்டிருக்குமானால் இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த டிக்டாக் உள்ளிட்ட செயலிகளும் முன்னதாக தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்